• Oct 30 2024

உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் ஜப்பானில் கண்டுபிடிப்பு..!!

Tamil nila / May 25th 2024, 6:48 am
image

Advertisement

ஜப்பானிய சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்த கரண்டியில் சாப்பிட்டால் உணவில் உப்பே போட வேண்டாம் என்றும் அந்த கரண்டியிலேயே உப்பு சுவை உள்ளது என்றும் தெரிவித்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஜப்பான் குளிர்பான நிறுவனம் ஒன்று , ஒரு மின்சார கரண்டியை கண்டுபிடித்துள்ளது.  இந்த கரண்டியை பயன்படுத்தி உணவு சாப்பிட்டால் உணவில் உப்பே போடாமல் இருந்தால் கூட நமக்கு தேவையான உப்பை அந்த கரண்டி உற்பத்தி செய்து கொடுக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 60 கிராம் எடை கொண்ட இந்த கரண்டியை சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் உப்பு இல்லாமல் நாக்கிற்கு உப்பு சுவை கொடுக்கும் புதிய தொழில்நுட்பம் இந்த கரண்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உணவில் உப்பு சில சமயம் அதிகமாகும் அல்லது குறைந்துவிடும், அந்த பிரச்சனையே இல்லாமல் ஒரு மனிதனுக்கு எந்த அளவு உப்பு தேவையோ அந்த அளவு உப்பு இந்த கரண்டி கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த கரண்டி அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே அதிக அளவு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த கரண்டி உலக அளவில் பிரபலமாகும் என்றும் லட்சக்கணக்கான கரண்டிகளை உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் ஜப்பானில் கண்டுபிடிப்பு. ஜப்பானிய சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்த கரண்டியில் சாப்பிட்டால் உணவில் உப்பே போட வேண்டாம் என்றும் அந்த கரண்டியிலேயே உப்பு சுவை உள்ளது என்றும் தெரிவித்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அதாவது ஜப்பான் குளிர்பான நிறுவனம் ஒன்று , ஒரு மின்சார கரண்டியை கண்டுபிடித்துள்ளது.  இந்த கரண்டியை பயன்படுத்தி உணவு சாப்பிட்டால் உணவில் உப்பே போடாமல் இருந்தால் கூட நமக்கு தேவையான உப்பை அந்த கரண்டி உற்பத்தி செய்து கொடுக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சுமார் 60 கிராம் எடை கொண்ட இந்த கரண்டியை சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் உப்பு இல்லாமல் நாக்கிற்கு உப்பு சுவை கொடுக்கும் புதிய தொழில்நுட்பம் இந்த கரண்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.உணவில் உப்பு சில சமயம் அதிகமாகும் அல்லது குறைந்துவிடும், அந்த பிரச்சனையே இல்லாமல் ஒரு மனிதனுக்கு எந்த அளவு உப்பு தேவையோ அந்த அளவு உப்பு இந்த கரண்டி கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இந்த கரண்டி அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே அதிக அளவு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த கரண்டி உலக அளவில் பிரபலமாகும் என்றும் லட்சக்கணக்கான கரண்டிகளை உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement