• Sep 17 2024

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியிடப்படும் ஆய்வு அறிக்கைகளை நம்ப வேண்டாம்- மக்களிடம் கோரிக்கை..!

Sharmi / Aug 24th 2024, 12:17 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் ஆய்வு அறிக்கைகளை நம்ப வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம்(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சரியான கணக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

அதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் இருக்கும் எனவும், அந்த காலப்பகுதியில் பெறுபேறுகள் தொடர்பில் விசேட வேலைகள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு தரப்பினரால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஒரு குடிமகன் என்ற முறையில் தாம் விரும்பும் கட்சி அல்லது ஒருவருக்கு வாக்களிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியிடப்படும் ஆய்வு அறிக்கைகளை நம்ப வேண்டாம்- மக்களிடம் கோரிக்கை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் ஆய்வு அறிக்கைகளை நம்ப வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்றையதினம்(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சரியான கணக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.அதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் இருக்கும் எனவும், அந்த காலப்பகுதியில் பெறுபேறுகள் தொடர்பில் விசேட வேலைகள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்படி, பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு தரப்பினரால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஒரு குடிமகன் என்ற முறையில் தாம் விரும்பும் கட்சி அல்லது ஒருவருக்கு வாக்களிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement