• Sep 17 2024

சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதி - வரி முறை திருத்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு..!

Sharmi / Aug 24th 2024, 9:36 am
image

Advertisement

சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதியை தடுக்கும் வகையில் தற்போதுள்ள வரி முறை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தவிர தற்போது பீடி உற்பத்தியின் போது அறவிடப்படும் இரண்டு ரூபா வரியே, பீடி இலை இறக்குமதியின் போதும் அறவிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி கற்பனையான வரி எனவும் எதிர்பார்த்த வருமானம் 03 பில்லியன் ரூபா எனவும், ஆனால் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் குறைவான வருமானமே கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சந்தையில் கிடைக்கும் 90% பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வந்துள்ளது.

பீடி இலை இறக்குமதிக்கு குறைந்த விலையில் அனுமதி வழங்கப்படுவதால், அதற்கான வர்த்தமானி அறிவிப்புடன் வரி திருத்தம் செய்யப்படுவதால், சட்டவிரோத சந்தைக்கு சவால் விடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதி - வரி முறை திருத்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு. சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதியை தடுக்கும் வகையில் தற்போதுள்ள வரி முறை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இது தவிர தற்போது பீடி உற்பத்தியின் போது அறவிடப்படும் இரண்டு ரூபா வரியே, பீடி இலை இறக்குமதியின் போதும் அறவிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி கற்பனையான வரி எனவும் எதிர்பார்த்த வருமானம் 03 பில்லியன் ரூபா எனவும், ஆனால் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் குறைவான வருமானமே கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எனவே, சந்தையில் கிடைக்கும் 90% பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வந்துள்ளது.பீடி இலை இறக்குமதிக்கு குறைந்த விலையில் அனுமதி வழங்கப்படுவதால், அதற்கான வர்த்தமானி அறிவிப்புடன் வரி திருத்தம் செய்யப்படுவதால், சட்டவிரோத சந்தைக்கு சவால் விடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement