• Nov 23 2024

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை - நாட்டிற்கு வருகிறார் எலன் மாக்ஸ்...!

Chithra / May 20th 2024, 12:44 pm
image

 

செல்வந்த வர்த்தகரான டெஸ்லா நிறுவனம் மற்றும் X சமூக வலைத்தளம் ஆகியவற்றின் உரிமையாளர் எலன் மாக்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், எலன் மாக்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எலன் மாக்ஸ்ஸை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய வசதி சேவையை ஆரம்பிக்க முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி, எலன் மாக்ஸ்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை, எலன் மாக்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஸ்டார்லிங்க் செய்மதி இணைய வசதி சேவையை ஆரம்பிக்க எலன் மாக்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எனினும், எலன் மாக்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது தொடர்பில் எலன் மாக்ஸ் தரப்புடன் இலங்கை அதிகாரிகள் தொடர்புகளை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு Starlink இணைய வசதி சேவை உதவிகரமாக அமையும் எனவும் ஜனாதிபதி, எலன் மாக்ஸிடம் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை - நாட்டிற்கு வருகிறார் எலன் மாக்ஸ்.  செல்வந்த வர்த்தகரான டெஸ்லா நிறுவனம் மற்றும் X சமூக வலைத்தளம் ஆகியவற்றின் உரிமையாளர் எலன் மாக்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், எலன் மாக்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எலன் மாக்ஸ்ஸை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய வசதி சேவையை ஆரம்பிக்க முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி, எலன் மாக்ஸ்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை, எலன் மாக்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, ஸ்டார்லிங்க் செய்மதி இணைய வசதி சேவையை ஆரம்பிக்க எலன் மாக்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.எனினும், எலன் மாக்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது தொடர்பில் எலன் மாக்ஸ் தரப்புடன் இலங்கை அதிகாரிகள் தொடர்புகளை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு Starlink இணைய வசதி சேவை உதவிகரமாக அமையும் எனவும் ஜனாதிபதி, எலன் மாக்ஸிடம் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement