உலகின் மிகப்பெரும் செல்வந்தரும் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலான் மஸ்க்கிற்கு 14ஆவதாகக் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது. அதன்பின் இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன.
பின்னர் தொடர்ந்து பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவருடன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் பாடகி கிரீம்சை திருமணம் செய்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
3 மனைவிகளையும் பிரிந்த அவர், ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையே சமீபத்தில் பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் எலான் மஸ்க்கிற்கும், தனக்கும் ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும் எலான் மஸ்க்-ஷிவோன் ஷில்லீஸ் தம்பதிக்கு 14-வது குழந்தை எப்போது பிறந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் 14ஆவது முறையாக தந்தையானர் உலகின் மிகப்பெரும் செல்வந்தரும் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலான் மஸ்க்கிற்கு 14ஆவதாகக் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.எலான் மஸ்க் கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது. அதன்பின் இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன.பின்னர் தொடர்ந்து பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் பாடகி கிரீம்சை திருமணம் செய்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.3 மனைவிகளையும் பிரிந்த அவர், ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.இதற்கிடையே சமீபத்தில் பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் எலான் மஸ்க்கிற்கும், தனக்கும் ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எவ்வாறு இருப்பினும் எலான் மஸ்க்-ஷிவோன் ஷில்லீஸ் தம்பதிக்கு 14-வது குழந்தை எப்போது பிறந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.