• Nov 28 2024

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்- கட்டுப்பணத்தை செலுத்திய மொட்டுக் கட்சியினர்..!

Sharmi / Sep 6th 2024, 12:06 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதன்படி காலி மாவட்ட செயலகத்தில் இன்று(06)  காலை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நளின் பிரியதர்சன மற்றும் நான்கு முன்னாள் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.

இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை,எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்- கட்டுப்பணத்தை செலுத்திய மொட்டுக் கட்சியினர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.அதன்படி காலி மாவட்ட செயலகத்தில் இன்று(06)  காலை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.எல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நளின் பிரியதர்சன மற்றும் நான்கு முன்னாள் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை,எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement