• Nov 26 2024

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் - தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Oct 7th 2024, 12:16 pm
image

 

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள், தபால் மூலம் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பொதிகள் அரச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த தினத்தில் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் அலுவலகத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்தலுக்கான் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி தபாலகங்களில் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வாக்களர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் - தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு  காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள், தபால் மூலம் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த பொதிகள் அரச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.குறித்த தினத்தில் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் அலுவலகத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுதேர்தலுக்கான் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி தபாலகங்களில் கையளிக்கப்படவுள்ளது.அத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வாக்களர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement