• Jan 11 2025

நுவரெலியா செல்வோருக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Jan 2nd 2025, 2:11 pm
image

 

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், 

கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும், வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.


நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவுவதுடன், அப்பகுதி முழுவதிலும் இருண்ட நிலை காணப்படுவதால் பொலிஸாரால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என  வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நுவரெலியா செல்வோருக்கு அவசர எச்சரிக்கை  நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும், வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவுவதுடன், அப்பகுதி முழுவதிலும் இருண்ட நிலை காணப்படுவதால் பொலிஸாரால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என  வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement