• Jan 07 2025

இலங்கைக்கான விமான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்!

Chithra / Dec 31st 2024, 2:59 pm
image

 

உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானமானது, EK654/655 ஆகச் செயற்படுவதுடன், அதன் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிக்கிறது.

கூடுதல் விமானத்தில் 360 பயணிகளுக்கு இடமளிக்க முடியும்.

மேலும், 2025 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் திட்டங்களுக்கும் உதவியாக அமைகிறது.

மேலதிக சேவை 2025 மார்ச் 31 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும்.

EK654 விமானம் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) உள்ளூர் நேரப்படி காலை 10:05 மணிக்கு (புதன் கிழமைகள் தவிர) புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடையும்.

EK655 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, டுபாய் விமான நிலையத்தை அடுத்த நாள் அதிகாலை 1.05 மணிக்கு சென்றடையும்.

2025 ஏப்ரல் 1 முதல், புதன்கிழமைகளில் ஏழாவது வாராந்திர விமானம் சேவையில் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும்.

எமிரேட்ஸ் தற்போது கொழும்பு மற்றும் டுபாய் இடையே இரண்டு நேரடி சேவைகளையும், மாலே வழியாக மூன்றாவது தினசரி சேவையையும் நடத்துகிறது.

இலங்கைக்கான விமான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்  உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானமானது, EK654/655 ஆகச் செயற்படுவதுடன், அதன் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிக்கிறது.கூடுதல் விமானத்தில் 360 பயணிகளுக்கு இடமளிக்க முடியும்.மேலும், 2025 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் திட்டங்களுக்கும் உதவியாக அமைகிறது.மேலதிக சேவை 2025 மார்ச் 31 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும்.EK654 விமானம் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) உள்ளூர் நேரப்படி காலை 10:05 மணிக்கு (புதன் கிழமைகள் தவிர) புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடையும்.EK655 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, டுபாய் விமான நிலையத்தை அடுத்த நாள் அதிகாலை 1.05 மணிக்கு சென்றடையும்.2025 ஏப்ரல் 1 முதல், புதன்கிழமைகளில் ஏழாவது வாராந்திர விமானம் சேவையில் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும்.எமிரேட்ஸ் தற்போது கொழும்பு மற்றும் டுபாய் இடையே இரண்டு நேரடி சேவைகளையும், மாலே வழியாக மூன்றாவது தினசரி சேவையையும் நடத்துகிறது.

Advertisement

Advertisement

Advertisement