• Nov 21 2025

கட்டுநாயக்காவில் திடீரென தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்; நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு!

Chithra / Nov 21st 2025, 8:12 am
image

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 ரக விமானம் ஒன்று, நேற்றைய தினம் இரவு  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

துபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EK-434 என்ற விமானமே இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவ உதவியை உடனடியாக வழங்குவதற்காக, கட்டுநாயக்கவில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. 

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன. 

இந்த அவசரத் தரையிறக்கத்தால் விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

அதனை தொடர்ந்து, மீண்டும் விமானம் புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் பிரிஸ்பேனுக்கு அதன் பயணத்தை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.  


கட்டுநாயக்காவில் திடீரென தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்; நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 ரக விமானம் ஒன்று, நேற்றைய தினம் இரவு  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.துபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EK-434 என்ற விமானமே இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவ உதவியை உடனடியாக வழங்குவதற்காக, கட்டுநாயக்கவில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன. இந்த அவசரத் தரையிறக்கத்தால் விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.அதனை தொடர்ந்து, மீண்டும் விமானம் புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் பிரிஸ்பேனுக்கு அதன் பயணத்தை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement