• Nov 18 2024

இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி - ஜனாதிபதி அனுர உரை

Chithra / Nov 18th 2024, 12:19 pm
image


இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது. 

இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. 

இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஜனாதிபதி  நன்றி தெரிவித்ததுடன், 

இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவினையும் மேற்கோள்காட்டினார்.

பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவற்றுவதே அரசாங்கம் பொறுப்பாகும் என்பதுடன் மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது எனவும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்

ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை அதிககாரம் ஆட்சியாளர்களுக்கு கிடைத்தது.

அதிகாரத்தின் ஊடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது. மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. எந்தவொரு அதிகாரம் வழங்கப்பட்டாலும் அதில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.

அத்துடன் பல புதியவர்கள் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்சார்ந்தவர்களை மக்கள் தெரிவு செய்துள்ளார். மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையுடனேயே மக்கள் அவர்களை தெரிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் எமக்கு கிடைத்த பாரிய வெற்றியின் ஊடாக எமது பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் நாம் வெற்றிகரமான முறையில் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்

இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி - ஜனாதிபதி அனுர உரை இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஜனாதிபதி  நன்றி தெரிவித்ததுடன், இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவினையும் மேற்கோள்காட்டினார்.பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவற்றுவதே அரசாங்கம் பொறுப்பாகும் என்பதுடன் மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது எனவும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை அதிககாரம் ஆட்சியாளர்களுக்கு கிடைத்தது.அதிகாரத்தின் ஊடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது. மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. எந்தவொரு அதிகாரம் வழங்கப்பட்டாலும் அதில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.அத்துடன் பல புதியவர்கள் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்சார்ந்தவர்களை மக்கள் தெரிவு செய்துள்ளார். மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையுடனேயே மக்கள் அவர்களை தெரிவு செய்துள்ளனர்.ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் எமக்கு கிடைத்த பாரிய வெற்றியின் ஊடாக எமது பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் நாம் வெற்றிகரமான முறையில் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement