• May 07 2025

கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள்; சபையில் சஜித் காட்டம்..!

Sharmi / Feb 22nd 2025, 7:40 pm
image

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், கொலைக்  கலாசாரம் இருந்து வரும் நிலையில் நாட்டு மக்களினதும் மக்கள்  பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். 

அதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் ஒட்டு மொத்த சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான வேலைத்திட்டத்தை முன்வையுங்கள். 

நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் பாதுகாப்பு கூடப் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள்; சபையில் சஜித் காட்டம். நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்."நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், கொலைக்  கலாசாரம் இருந்து வரும் நிலையில் நாட்டு மக்களினதும் மக்கள்  பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டும்.பிள்ளைகள் மற்றும் ஒட்டு மொத்த சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான வேலைத்திட்டத்தை முன்வையுங்கள். நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் பாதுகாப்பு கூடப் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now