• Feb 23 2025

மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் யாழில் கணவன் விபரீத முடிவு..!

Sharmi / Feb 22nd 2025, 4:39 pm
image

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலிப் பகுதியில் இச் சம்பவமானது இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் உறவினர்கள் இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்திருந்தனர்.

இந்நிலையில், அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குடும்பஸ்தரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் யாழில் கணவன் விபரீத முடிவு. யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலிப் பகுதியில் இச் சம்பவமானது இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் உறவினர்கள் இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்திருந்தனர்.இந்நிலையில், அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குடும்பஸ்தரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement