• Mar 17 2025

மட்டு. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் எண்டோஸ்கோபி அலகு திறந்துவைப்பு..!

Sharmi / Mar 17th 2025, 10:28 am
image

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 50 மில்லியன் நிதியில் ஒதுக்கீட்டில் எண்டோஸ்கோப்பி அலகு இன்றையதினம்(17) திறந்து வைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன், ஏனைய வைத்தியர்கள், தாதிய பரிபாலகர்கள், தாதிஉத்தியோகஸ்த்தர்கள், வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

சுகாதார அமைச்சின் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எண்டோஸ்கோப்பி இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பட்டிருப்புத் தொகுதியிலுள்ள நோயாளர்கள் இதுவரைகாலமும் எண்டோஸ்கோப்பி தொடர்பான பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. 

இன்றிலிருந்து பட்டிருப்புத் தொகுதியிலுள்ள நோயாளர்கள் எதுவித அச்சமுமின்றி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வந்து எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளைப் பெற்று அவற்றுக்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்ககொள்ளலாம். 

எண்டோஸ்கோப்பி என்பது இரண்டு விதமாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடிகின்றது. இவ்வியந்திரம் இந்த வைத்தியசாலைக்குக் கிடைக்கப்பெற்றதானது பெரும் வரப்பிரசாதாமாகும். எனவே உயிராபத்தான நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும்போதும் சிறந்த உயிர்காக்கும் சேவைகளை எம்மால் மேற்கொள்ள முடியும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன் இதன்போது தெரிவித்தார்.


மட்டு. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் எண்டோஸ்கோபி அலகு திறந்துவைப்பு. மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 50 மில்லியன் நிதியில் ஒதுக்கீட்டில் எண்டோஸ்கோப்பி அலகு இன்றையதினம்(17) திறந்து வைக்கப்பட்டது.களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன், ஏனைய வைத்தியர்கள், தாதிய பரிபாலகர்கள், தாதிஉத்தியோகஸ்த்தர்கள், வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். சுகாதார அமைச்சின் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எண்டோஸ்கோப்பி இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பட்டிருப்புத் தொகுதியிலுள்ள நோயாளர்கள் இதுவரைகாலமும் எண்டோஸ்கோப்பி தொடர்பான பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இன்றிலிருந்து பட்டிருப்புத் தொகுதியிலுள்ள நோயாளர்கள் எதுவித அச்சமுமின்றி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வந்து எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளைப் பெற்று அவற்றுக்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்ககொள்ளலாம். எண்டோஸ்கோப்பி என்பது இரண்டு விதமாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடிகின்றது. இவ்வியந்திரம் இந்த வைத்தியசாலைக்குக் கிடைக்கப்பெற்றதானது பெரும் வரப்பிரசாதாமாகும். எனவே உயிராபத்தான நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும்போதும் சிறந்த உயிர்காக்கும் சேவைகளை எம்மால் மேற்கொள்ள முடியும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement