திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்காக ஈரோஸ் ஜனநாயக முன்னணி இன்று (19) வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் எஸ். கே. சந்திரனால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கட்சியின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்றோம். இதற்காக, இளைஞர்கள், யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்களையும் எங்களுடைய வேட்பாளர் பட்டியலில் இணைத்துள்ளோம்.
கிராமங்களில் இருந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது எங்களுடைய நோக்கமாகும். அதற்காக குச்சவெளி பிரதேச சபையிலிருந்து இருந்து எங்களுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.
ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்கள் அற்ற ஒரு கிராம ஆட்சியை குச்சவெளி பிரதேசத்தில் ஏற்படுத்துவதற்காக இளைஞர்களும் யுவதிகளும் எங்களோடு கைகோர்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
குச்சவெளி பிரதேச சபைக்காக ஈரோஸ் ஜனநாயக முன்னணி வேட்புமனு தாக்கல் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்காக ஈரோஸ் ஜனநாயக முன்னணி இன்று (19) வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது.ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் எஸ். கே. சந்திரனால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,கட்சியின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்றோம். இதற்காக, இளைஞர்கள், யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்களையும் எங்களுடைய வேட்பாளர் பட்டியலில் இணைத்துள்ளோம். கிராமங்களில் இருந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது எங்களுடைய நோக்கமாகும். அதற்காக குச்சவெளி பிரதேச சபையிலிருந்து இருந்து எங்களுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்கள் அற்ற ஒரு கிராம ஆட்சியை குச்சவெளி பிரதேசத்தில் ஏற்படுத்துவதற்காக இளைஞர்களும் யுவதிகளும் எங்களோடு கைகோர்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.