• Mar 19 2025

மதுபான போத்தல்களுடன் பயணித்த லொறி கவிழ்ந்து விபத்து; போத்தல்களை எடுக்க முண்டியடித்த மதுப்பிரியர்கள்

Chithra / Mar 19th 2025, 4:19 pm
image


 

கொழும்பு- இரத்னபுரி பிரதான வீதியில் எஹெலியகொட பகுதியில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

வளைவு ஒன்றில் வேகமாக சென்ற போது கொள்கலன் லொறி கவிழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், ஏராளமான மதுபான போத்தல்கள் சாலையில் விழுந்து நொறுங்கியுள்ளன. 

இவ்வாறு வீதியில் சிதறிய மதுபான போத்தல்களை மதுப்பிரியர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் புகைப்படங்களில் வெளியாகியுள்ளன.


மதுபான போத்தல்களுடன் பயணித்த லொறி கவிழ்ந்து விபத்து; போத்தல்களை எடுக்க முண்டியடித்த மதுப்பிரியர்கள்  கொழும்பு- இரத்னபுரி பிரதான வீதியில் எஹெலியகொட பகுதியில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.வளைவு ஒன்றில் வேகமாக சென்ற போது கொள்கலன் லொறி கவிழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், ஏராளமான மதுபான போத்தல்கள் சாலையில் விழுந்து நொறுங்கியுள்ளன. இவ்வாறு வீதியில் சிதறிய மதுபான போத்தல்களை மதுப்பிரியர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் புகைப்படங்களில் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement