• May 17 2024

இ.தொ.கா வினால் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!

crownson / Dec 1st 2022, 7:02 am
image

Advertisement

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர் என்போரால் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை போலீஸ் நிலையத்தில் நேற்று(30) முறைப்பாடு ன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஷ்குமார் என்பவரே இவ்வாறு குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைபாட்டில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட  நிர்வாகத்தினால் தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மீறப்பட்டு வருவதாக குறித்து ஊடகவியலாளர் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கின்றார்.

குறிப்பாக கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் நீர் தாங்கி சுத்தம் செய்து தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதனை சுத்தம் செய்து தர முடியாது .அதனை சுத்தம் செய்யும் பணிகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் செலவில் தொழிலாளர்களை வழங்க முடியாது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருமானால் குறித்த நீர் தாங்கி மூடி விடுவோம்,என தோட்ட உதவி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் தோட்ட உதவி முகாமையாளுடன் கலந்துரையாடி குறித்த நீர் தாங்கி மூட வேண்டாம், என கோரிக்கை விடுப்பதற்காக சென்று உள்ளனர்.

இதன் போது தோட்ட உதவி முகாமையாளர் ஊடகவியலாளர் சதீஷ்குமார், தொடர்பில் பொதுமக்களிடம் அவரது நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு விடயங்களை கூறியுள்ளார்.

குறிப்பாக தோட்டத்தில் நடைபெறும் ஊழல் மோசடிகளை ஊடகவியலாளர் சதீஷ் மடுவில்சீம பெருந்தோட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தோட்ட பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு, தொடர்பில் செய்தி சேகரிப்பு சென்றிருந்த ஊடகவியலாளர் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

தோட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர் சதீஷின் பக்கம் நிக்க வேண்டிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர், தோட்ட உதவி முகாமையாளுடன் இணைந்து கொண்டு ஊடகவியலாளரின் பணிகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதோடு, பொதுமக்களின் முன்னிலையில் ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தியாகவும் குறித்த முறைப்பாடு தெரிவிக்கிறது.

இ.தொ.கா வினால் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர் என்போரால் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை போலீஸ் நிலையத்தில் நேற்று(30) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் சாம்பசிவம் சதீஷ்குமார் என்பவரே இவ்வாறு குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைபாட்டில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட  நிர்வாகத்தினால் தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மீறப்பட்டு வருவதாக குறித்து ஊடகவியலாளர் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கின்றார். குறிப்பாக கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் நீர் தாங்கி சுத்தம் செய்து தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இதனை சுத்தம் செய்து தர முடியாது .அதனை சுத்தம் செய்யும் பணிகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் செலவில் தொழிலாளர்களை வழங்க முடியாது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருமானால் குறித்த நீர் தாங்கி மூடி விடுவோம்,என தோட்ட உதவி முகாமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொதுமக்கள் தோட்ட உதவி முகாமையாளுடன் கலந்துரையாடி குறித்த நீர் தாங்கி மூட வேண்டாம், என கோரிக்கை விடுப்பதற்காக சென்று உள்ளனர். இதன் போது தோட்ட உதவி முகாமையாளர் ஊடகவியலாளர் சதீஷ்குமார், தொடர்பில் பொதுமக்களிடம் அவரது நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு விடயங்களை கூறியுள்ளார். குறிப்பாக தோட்டத்தில் நடைபெறும் ஊழல் மோசடிகளை ஊடகவியலாளர் சதீஷ் மடுவில்சீம பெருந்தோட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தோட்ட பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு, தொடர்பில் செய்தி சேகரிப்பு சென்றிருந்த ஊடகவியலாளர் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். தோட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர் சதீஷின் பக்கம் நிக்க வேண்டிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர், தோட்ட உதவி முகாமையாளுடன் இணைந்து கொண்டு ஊடகவியலாளரின் பணிகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதோடு, பொதுமக்களின் முன்னிலையில் ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தியாகவும் குறித்த முறைப்பாடு தெரிவிக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement