• Sep 21 2024

ஒரு வாக்கு அதிகமாக விழுந்தாலும் இலங்கைத் தமிழினம் 13 ஐ ஏற்றுக்கொண்டதாகக் காட்டப்படும்- கஜேந்திர குமார் எச்சரிக்கை! SamugamMedia

Tamil nila / Feb 18th 2023, 1:05 pm
image

Advertisement

நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை த.தே.ம முன்னணி பெற்றுக்கொள்ளும் மொத்தவாக்குகளைக்காட்டிலும் ஒரு வாக்கு அதிகமாக இருந்தாலே போதும் இலங்கைத் தமிழினம் 13 ஐ ஏற்றுக்கொண்டதாகக் காட்டப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 


இன்று 17.02.2023 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இந் நிகழ்வின் போது அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகத்தினருக்கு ரூபா ஒருலட்சம் நிதியுதவி பா.ம.உ கஜேந்திர குமார் பொன்னம்பலத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் யாழ் மாநகர சபை வட்டார உறுப்பினர் ரஜீவ்காந் மற்றும் த.தே.ம.முன்னணியின் விகிதாசார வேட்பாளர் ஹரிகரன் ஆகியோர் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


ஒரு வாக்கு அதிகமாக விழுந்தாலும் இலங்கைத் தமிழினம் 13 ஐ ஏற்றுக்கொண்டதாகக் காட்டப்படும்- கஜேந்திர குமார் எச்சரிக்கை SamugamMedia நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை த.தே.ம முன்னணி பெற்றுக்கொள்ளும் மொத்தவாக்குகளைக்காட்டிலும் ஒரு வாக்கு அதிகமாக இருந்தாலே போதும் இலங்கைத் தமிழினம் 13 ஐ ஏற்றுக்கொண்டதாகக் காட்டப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று 17.02.2023 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந் நிகழ்வின் போது அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகத்தினருக்கு ரூபா ஒருலட்சம் நிதியுதவி பா.ம.உ கஜேந்திர குமார் பொன்னம்பலத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.இந் நிகழ்வில் யாழ் மாநகர சபை வட்டார உறுப்பினர் ரஜீவ்காந் மற்றும் த.தே.ம.முன்னணியின் விகிதாசார வேட்பாளர் ஹரிகரன் ஆகியோர் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement