• Nov 17 2024

ரணிலுக்கு வாக்களிக்கவில்லையெனில் ஒவ்வொரு தமிழனும் வேதனைப்படுவான்- முன்னாள் எம்.பி. சங்கர் தெரிவிப்பு..!

Sharmi / Sep 12th 2024, 8:25 am
image

நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் ஒவ்வொரு தமிழனும் வேதனைப்படுவான் நிம்மதியற்று அழுவான் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் தெரிவித்தார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்றையதினம் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"இந்த நாட்டின் எதிர்காலம் என்பது நாட்டின் தலைவரின் வழிகாட்டலில் உள்ளது. இன்று எமது  மக்களுக்குக் காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச காணிகள் அவர்களுக்கு முழு உரிமையுள்ள உறுதிப்பத்திரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. 

வீடுகளின் உரிமைகளும் சொந்த வீடுகளாக வழங்கப்பட்டுள்ளன. இவை எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எமக்கு இரண்டு வருடங்கள் சேவை செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்து இன்னும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால், நாம் உரிமையுடனும் நெஞ்சை நிமிர்த்தியும் அவர்களிடம் எமது மக்களுக்கான தேவைகளைக் கேட்க முடியும். 

வெறும் வெட்டிப்பேச்சுக்காக தேவையற்ற தேசிய வாதத்தைப்  பேசிக்கொண்டு எமது இருப்பைப் பாதுகாக்கக் கூடிய சூழலை இழந்து விடுகின்றோம்.

ஒரு கடதாசியில் சீனி என்று எழுதிவிட்டு அதனைச் சுவைத்துப் பார்த்தால் இனிக்காது. ஏனைய வேட்பாளர்கள் அந்த வெற்றுக் கோஷங்களையே இடுகின்றார்கள். ஒருவர் எதிர்காலத்தில் என்ன செய்வார் என்பதை விட நிகழ்காலத்தில் என்ன செய்தார் என்பதே முக்கியம். அவ்வாறு செய்து காட்டியவரே எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.  

ஒரு வேலையைச் செய்ய அதனைச் செய்யக் கூடிய பொருத்தமானவருக்கே வழங்க வேண்டும். புதிது, புதிதாக வந்து வெறுமனே கோஷமிடுவோரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் தலைநிமிர முடியாத சூழல் ஏற்படும். 

ஜனாதிபதித் தேர்தல் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வருகின்றது. எனவே, அதில் எமது வாக்கு மிக முக்கியமானது. எனவே, இந்தத் தேர்தலில் நாம் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

எமது தேவைகளைக் கேட்டறியும் ஒருவரிடமே நாம் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இன, மத பேதமின்றி செயற்படும் ரணில் விக்கிரமசிங்கிவிடமே எமக்கான உரிமைகளைப் பெற முடியும். 

நாம் இந்த ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் ஒவ்வொரு தமிழனும் வேதனைப்படுவான். நிம்மதியற்று அழுவான். எனவே, எமக்கு சேவைச் செய்தவரை எதிர்காலத்திலும் மறக்காது அவரை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வோம் எனவும் தெரிவித்தார்.

ரணிலுக்கு வாக்களிக்கவில்லையெனில் ஒவ்வொரு தமிழனும் வேதனைப்படுவான்- முன்னாள் எம்.பி. சங்கர் தெரிவிப்பு. நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் ஒவ்வொரு தமிழனும் வேதனைப்படுவான் நிம்மதியற்று அழுவான் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் தெரிவித்தார்.அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்றையதினம் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்."இந்த நாட்டின் எதிர்காலம் என்பது நாட்டின் தலைவரின் வழிகாட்டலில் உள்ளது. இன்று எமது  மக்களுக்குக் காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச காணிகள் அவர்களுக்கு முழு உரிமையுள்ள உறுதிப்பத்திரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளின் உரிமைகளும் சொந்த வீடுகளாக வழங்கப்பட்டுள்ளன. இவை எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.எமக்கு இரண்டு வருடங்கள் சேவை செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்து இன்னும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால், நாம் உரிமையுடனும் நெஞ்சை நிமிர்த்தியும் அவர்களிடம் எமது மக்களுக்கான தேவைகளைக் கேட்க முடியும். வெறும் வெட்டிப்பேச்சுக்காக தேவையற்ற தேசிய வாதத்தைப்  பேசிக்கொண்டு எமது இருப்பைப் பாதுகாக்கக் கூடிய சூழலை இழந்து விடுகின்றோம்.ஒரு கடதாசியில் சீனி என்று எழுதிவிட்டு அதனைச் சுவைத்துப் பார்த்தால் இனிக்காது. ஏனைய வேட்பாளர்கள் அந்த வெற்றுக் கோஷங்களையே இடுகின்றார்கள். ஒருவர் எதிர்காலத்தில் என்ன செய்வார் என்பதை விட நிகழ்காலத்தில் என்ன செய்தார் என்பதே முக்கியம். அவ்வாறு செய்து காட்டியவரே எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.  ஒரு வேலையைச் செய்ய அதனைச் செய்யக் கூடிய பொருத்தமானவருக்கே வழங்க வேண்டும். புதிது, புதிதாக வந்து வெறுமனே கோஷமிடுவோரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் தலைநிமிர முடியாத சூழல் ஏற்படும். ஜனாதிபதித் தேர்தல் என்பது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வருகின்றது. எனவே, அதில் எமது வாக்கு மிக முக்கியமானது. எனவே, இந்தத் தேர்தலில் நாம் சரியான முடிவை எடுக்க வேண்டும்.எமது தேவைகளைக் கேட்டறியும் ஒருவரிடமே நாம் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இன, மத பேதமின்றி செயற்படும் ரணில் விக்கிரமசிங்கிவிடமே எமக்கான உரிமைகளைப் பெற முடியும். நாம் இந்த ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் ஒவ்வொரு தமிழனும் வேதனைப்படுவான். நிம்மதியற்று அழுவான். எனவே, எமக்கு சேவைச் செய்தவரை எதிர்காலத்திலும் மறக்காது அவரை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement