• Nov 28 2024

மன்னாரில் முன்னாள் போராளி மர்ம மரணம்...! நடந்தது என்ன?

Sharmi / Jul 6th 2024, 12:56 pm
image

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம்(5) இரவு  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில், 42 வயதுடைய கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன்பாக நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார்.

இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என  திடீரென சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து, குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 'கம்பிகளின் மொழி பிறேம்' என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் என்ற முன்னாள் போராளியாவார்.

ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்த இவர், பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் முன்னாள் போராளி மர்ம மரணம். நடந்தது என்ன மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம்(5) இரவு  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில், 42 வயதுடைய கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன்பாக நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார்.இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என  திடீரென சத்தம் போட்டுள்ளார்.இதனையடுத்து, குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகின்றது.இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 'கம்பிகளின் மொழி பிறேம்' என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் என்ற முன்னாள் போராளியாவார்.ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்த இவர், பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement