• Jan 26 2025

குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பளையில் மக்கள் போராட்டம்...!

Sharmi / Jul 6th 2024, 1:08 pm
image

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த குப்பைகள் சில நாட்களுக்கு முன்னர் தீயிடப்பட்டுள்ளதாகவும், இதனால் அல்லிப்பளை பிரதேச மக்கள் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று(06)  காலை 10 மணியளவில் பளை பேருந்து நிலையத்திலிருந்து கவனயீர்ப்பாக சென்ற மக்கள் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என மக்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.


குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பளையில் மக்கள் போராட்டம். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த குப்பைகள் சில நாட்களுக்கு முன்னர் தீயிடப்பட்டுள்ளதாகவும், இதனால் அல்லிப்பளை பிரதேச மக்கள் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் இன்று(06)  காலை 10 மணியளவில் பளை பேருந்து நிலையத்திலிருந்து கவனயீர்ப்பாக சென்ற மக்கள் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.தொடர்ந்து பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என மக்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement