• Oct 05 2024

இலங்கையிலிருந்து மேலும் ஒரு குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்...!

Sharmi / Jul 6th 2024, 1:29 pm
image

Advertisement

தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக இன்றைய தினம்(06) காலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளுமே தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.

தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும்  மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாணையில், குறித்த யுவதி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவருக்கு அங்கே திருமணம் முடிந்து கணவருடன் பிரிந்து வாழ்கிறார்  எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தியா வருவதற்கான படகு கட்டணமாக 2லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர் வாக்குமூலமளித்தார்.

விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் மெரைன் பொலிஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்படைத்தனர்.





இலங்கையிலிருந்து மேலும் ஒரு குடும்பம் தமிழகத்தில் தஞ்சம். தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக இன்றைய தினம்(06) காலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளுமே தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும்  மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.விசாணையில், குறித்த யுவதி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவருக்கு அங்கே திருமணம் முடிந்து கணவருடன் பிரிந்து வாழ்கிறார்  எனவும் தெரியவந்துள்ளது.இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.இந்தியா வருவதற்கான படகு கட்டணமாக 2லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர் வாக்குமூலமளித்தார்.விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் மெரைன் பொலிஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்படைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement