வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமத்திய மாகாணத்தில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டதை, ஆசிரியர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வுகள் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை வினாத்தாள் கசிவு – ஆசிரியர் ஒருவர் உடனடி பணி இடை நீக்கம் வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமத்திய மாகாணத்தில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டதை, ஆசிரியர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.இந்த தேர்வுகள் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.