• Nov 23 2024

10 வது நாளாக தொடரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள்...!

Sharmi / Jul 15th 2024, 3:25 pm
image

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் பத்தாவது நாளாக இன்று (15) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில், தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ குழுவினருடன், தடயவியல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன்  பத்தாம் நாள் அகழ்வாய்வு நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன 

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்குமுன்னர் இடம்பெற்ற இரண்டுகட்ட அகழ்வாய்வுகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 7 மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 47 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

10 வது நாளாக தொடரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் பத்தாவது நாளாக இன்று (15) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுமுல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில், தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ குழுவினருடன், தடயவியல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன்  பத்தாம் நாள் அகழ்வாய்வு நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்குமுன்னர் இடம்பெற்ற இரண்டுகட்ட அகழ்வாய்வுகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 7 மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 47 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement