• Dec 02 2024

அறிவியலின் உச்சம்: விண்வெளி வீரர்கள் இனி எதை நீராகக் குடிக்கப் போகின்றனர் தெரியுமா?

Sharmi / Jul 15th 2024, 3:33 pm
image

விண்வெளி வீரர்கள், சிறுநீரை குடிநீராக மறுசுழற்சி செய்யக்கூடிய விண்வெளி உடையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

இந்த உடை, விண்வெளி வீரர்களுக்கு நீண்ட விண்வெளி நடைப் பயணங்களைச் செய்ய உதவும் வகையில்   வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 மேலும் இது உடலின் ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை குடிநீராக மாற்றும் வகையில் முழு உடல் "ஸ்டில்சூட்" (stillsuits)  வடிவமைக்கப்பட்டுள்ளது.  

விண்வெளி வீரர்களின் கழுத்தில் இருக்கும் டியூப் மூலம் அவர்கள் இந்த நீரைக் குடிக்கலாம் என்றும் இதன் மூலம் நீண்ட காலம் விண்வெளியில் அவர்கள் இருந்து செயற்பட முடியும் எனவும் குறித்த உடையை வடிவமைத்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.



கொர்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தின் விண்வெளி மருத்துவம் மற்றும் கொள்கை ஆராய்ச்சியாளரும், புதிய விண்வெளி உடையின் இணை வடிவமைப்பாளருமான சோபியா எட்லின்,( Sofia Etlin), இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

"எனக்கு நினைவில் இருக்கும் வரை நான் டூன் தொடரின் ரசிகனாக இருந்தேன். நிஜ வாழ்க்கையில் ஸ்டில்சூட்டை உருவாக்குவது எப்போதுமே எனக்கு ஒரு கனவாகவே இருந்தது." என சயின்ஸ் செய்தி முகமையிடம்  கூறியுள்ளார்.  

நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கு (2030 ஆம் ஆண்டு) முன் இதைப் பயன்படுத்த முடியும் என்று சூட்-ன் வடிவமைப்பாளர்கள் நம்புகிறார்கள்.

தற்போதைய விண்வெளி உடைகளின் வரம்புகள் குறித்து எட்லின் கூறுகையில்,

‘தற்போதைய ஸ்பேஸ்சூட்களில் ஒரு லிட்டர் தண்ணீரை மட்டுமே கையாளக்கூடிய பைகள் உள்ளன. இது விண்வெளி வீரர்கள் நீண்ட கால சந்திர விண்வெளி நடைப்பயணங்களில் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது, இந்த நடைப் பயணங்கள் 10 மணிநேரம் நீடிக்கும், சில அவசரகாலத்தில் 24 மணிநேரம் வரை கூட நீடிக்கும் என்றார்.


புதிய ஸ்பேஸ்சூட் எப்படி வேலை செய்யும்?

புதிய ஸ்பேஸ்சூட்டில் சிறுநீர் கழிக்க ஏதுவதாக அங்கு  சிலிகான் சேகரிப்பு கோப்பையை (பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெவ்வேறு வடிவம் மற்றும் அளவு கொண்டது) வைக்கப்படும். கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்த, கப் பல அடுக்கு நெகிழ்வான துணியால் செய்யப்பட்ட ஒரு உள்ளாடைக்குள் உள்ளது.

சிறுநீர் பகுதியில் பொருத்தப்படும் கப் ஒரு வேக்கம் பம்புடன் இணைக்கப்படும், இது விண்வெளி வீரர் சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் தானாகவே இயங்கும். 

 " சிறுநீர் ஒருமுறை சேகரிக்கப்பட்ட பிறகு, அது சிறுநீர் வடிகட்டுதல் முறைக்கு மாற்றப்படுகிறது, அங்கு அது 87% திறனுடன் சுத்தமான குடிநீராக மறுசுழற்சி செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

500 மில்லி சிறுநீரை சேகரித்து சுத்திகரிப்பதற்கான முழு செயல்முறைக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று புதிய விண்வெளி உடையை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அமைப்பு சுமார் 8 கிலோ எடையும், 38cm க்கு 23cm x 23cm அளவையும் கொண்டுள்ளது, இது விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்சூட்டின் பின்புறம் பொருத்தி எடுத்துச் செல்ல இலகுவாக இருக்கும் என  விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அத்துடன் இந்த புதிய விண்வெளி உடையின் வடிவமைப்பு  ஃபிரான்டியர்ஸ் இன் ஸ்பேஸ் டெக்னாலஜி இதழால் வெளியிடப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.


அறிவியலின் உச்சம்: விண்வெளி வீரர்கள் இனி எதை நீராகக் குடிக்கப் போகின்றனர் தெரியுமா விண்வெளி வீரர்கள், சிறுநீரை குடிநீராக மறுசுழற்சி செய்யக்கூடிய விண்வெளி உடையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.இந்த உடை, விண்வெளி வீரர்களுக்கு நீண்ட விண்வெளி நடைப் பயணங்களைச் செய்ய உதவும் வகையில்   வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இது உடலின் ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை குடிநீராக மாற்றும் வகையில் முழு உடல் "ஸ்டில்சூட்" (stillsuits)  வடிவமைக்கப்பட்டுள்ளது.  விண்வெளி வீரர்களின் கழுத்தில் இருக்கும் டியூப் மூலம் அவர்கள் இந்த நீரைக் குடிக்கலாம் என்றும் இதன் மூலம் நீண்ட காலம் விண்வெளியில் அவர்கள் இருந்து செயற்பட முடியும் எனவும் குறித்த உடையை வடிவமைத்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.கொர்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தின் விண்வெளி மருத்துவம் மற்றும் கொள்கை ஆராய்ச்சியாளரும், புதிய விண்வெளி உடையின் இணை வடிவமைப்பாளருமான சோபியா எட்லின்,( Sofia Etlin), இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "எனக்கு நினைவில் இருக்கும் வரை நான் டூன் தொடரின் ரசிகனாக இருந்தேன். நிஜ வாழ்க்கையில் ஸ்டில்சூட்டை உருவாக்குவது எப்போதுமே எனக்கு ஒரு கனவாகவே இருந்தது." என சயின்ஸ் செய்தி முகமையிடம்  கூறியுள்ளார்.  நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கு (2030 ஆம் ஆண்டு) முன் இதைப் பயன்படுத்த முடியும் என்று சூட்-ன் வடிவமைப்பாளர்கள் நம்புகிறார்கள்.தற்போதைய விண்வெளி உடைகளின் வரம்புகள் குறித்து எட்லின் கூறுகையில்,‘தற்போதைய ஸ்பேஸ்சூட்களில் ஒரு லிட்டர் தண்ணீரை மட்டுமே கையாளக்கூடிய பைகள் உள்ளன. இது விண்வெளி வீரர்கள் நீண்ட கால சந்திர விண்வெளி நடைப்பயணங்களில் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது, இந்த நடைப் பயணங்கள் 10 மணிநேரம் நீடிக்கும், சில அவசரகாலத்தில் 24 மணிநேரம் வரை கூட நீடிக்கும் என்றார்.புதிய ஸ்பேஸ்சூட் எப்படி வேலை செய்யும்புதிய ஸ்பேஸ்சூட்டில் சிறுநீர் கழிக்க ஏதுவதாக அங்கு  சிலிகான் சேகரிப்பு கோப்பையை (பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெவ்வேறு வடிவம் மற்றும் அளவு கொண்டது) வைக்கப்படும். கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்த, கப் பல அடுக்கு நெகிழ்வான துணியால் செய்யப்பட்ட ஒரு உள்ளாடைக்குள் உள்ளது.சிறுநீர் பகுதியில் பொருத்தப்படும் கப் ஒரு வேக்கம் பம்புடன் இணைக்கப்படும், இது விண்வெளி வீரர் சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் தானாகவே இயங்கும்.  " சிறுநீர் ஒருமுறை சேகரிக்கப்பட்ட பிறகு, அது சிறுநீர் வடிகட்டுதல் முறைக்கு மாற்றப்படுகிறது, அங்கு அது 87% திறனுடன் சுத்தமான குடிநீராக மறுசுழற்சி செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.500 மில்லி சிறுநீரை சேகரித்து சுத்திகரிப்பதற்கான முழு செயல்முறைக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று புதிய விண்வெளி உடையை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அமைப்பு சுமார் 8 கிலோ எடையும், 38cm க்கு 23cm x 23cm அளவையும் கொண்டுள்ளது, இது விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்சூட்டின் பின்புறம் பொருத்தி எடுத்துச் செல்ல இலகுவாக இருக்கும் என  விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.அத்துடன் இந்த புதிய விண்வெளி உடையின் வடிவமைப்பு  ஃபிரான்டியர்ஸ் இன் ஸ்பேஸ் டெக்னாலஜி இதழால் வெளியிடப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement