• Jan 15 2025

துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்ட : உலகின் ஆகப் பெரிய தங்கக்கட்டி

Tharmini / Dec 8th 2024, 12:53 pm
image

துபாய் தங்கச் சந்தை விரிவாக்கக் (Dubai Gold Souk Extension) கட்டடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அத் தங்கக் கட்டியை நேற்று (07)  மற்றும் இன்று ( 08) ஆம்  ஆகிய இரு நாட்களில் மட்டுமே காண வாய்ப்புக் கிடைக்கும்.

அத்துடன் பெரிய தங்கக்கட்டியுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம். 

இஸ்ஸா அல் ஃபலாசி எமிரேட்ஸ் நாணயச்சாலை அந்த ஆகப் பெரிய தங்கக்கட்டியை உருவாக்கியுள்ளது.

300 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள அந்தத் தங்கக்கட்டி கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தங்கம், நகைச் சந்தையைப் பொறுத்தவரை, உலகளவில் துபாய் முன்னணி வகிக்கும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதேவேளை முன்னதாக, 250 கிலோ எடையில் ஜப்பான் ஒரு தங்கக்கட்டியை உருவாக்கி இருந்தது.

துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்ட : உலகின் ஆகப் பெரிய தங்கக்கட்டி துபாய் தங்கச் சந்தை விரிவாக்கக் (Dubai Gold Souk Extension) கட்டடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அத் தங்கக் கட்டியை நேற்று (07)  மற்றும் இன்று ( 08) ஆம்  ஆகிய இரு நாட்களில் மட்டுமே காண வாய்ப்புக் கிடைக்கும்.அத்துடன் பெரிய தங்கக்கட்டியுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம். இஸ்ஸா அல் ஃபலாசி எமிரேட்ஸ் நாணயச்சாலை அந்த ஆகப் பெரிய தங்கக்கட்டியை உருவாக்கியுள்ளது.300 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள அந்தத் தங்கக்கட்டி கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.தங்கம், நகைச் சந்தையைப் பொறுத்தவரை, உலகளவில் துபாய் முன்னணி வகிக்கும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.அதேவேளை முன்னதாக, 250 கிலோ எடையில் ஜப்பான் ஒரு தங்கக்கட்டியை உருவாக்கி இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement