• Feb 09 2025

அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய காலாவதியான பேரீச்சம்பழங்கள்!

Chithra / Feb 9th 2025, 7:36 am
image

 

காலாவதியான பேரீச்சம்பழங்கள் விற்பனை செய்யத் தயாராக இருந்த நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகாரசபை புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் மேற்கொண்ட சோதனையின் போது, மாற்றப்பட்ட உற்பத்தி திகதியுடன் 220 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி, நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்போது புறக்கோட்டையில் உள்ள கடைகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது, அந்த சோதனைகள் நேற்றும் நடத்தப்பட்டன.

இதன்போதே மாற்றப்பட்ட உற்பத்தி திகதியுடன் 220 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அரிசியின் விலை நெல் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக அதிகரித்து வருவதால், அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே சுட்டிக்காட்டியுள்ளார்.     

இந்நிலையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட உத்தரவாத விலையில் நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. 

அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய காலாவதியான பேரீச்சம்பழங்கள்  காலாவதியான பேரீச்சம்பழங்கள் விற்பனை செய்யத் தயாராக இருந்த நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.நுகர்வோர் விவகார அதிகாரசபை புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் மேற்கொண்ட சோதனையின் போது, மாற்றப்பட்ட உற்பத்தி திகதியுடன் 220 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதேவேளை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி, நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்போது புறக்கோட்டையில் உள்ள கடைகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது, அந்த சோதனைகள் நேற்றும் நடத்தப்பட்டன.இதன்போதே மாற்றப்பட்ட உற்பத்தி திகதியுடன் 220 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதற்கிடையில், அரிசியின் விலை நெல் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக அதிகரித்து வருவதால், அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே சுட்டிக்காட்டியுள்ளார்.     இந்நிலையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட உத்தரவாத விலையில் நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement