திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுவர்ன ஜெயந்திபுர பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் வயோதிபரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் இன்று (01) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேனைக்கு காவலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த கட்டு துவக்கு வெடித்ததாகவும் காலில் பலதத காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்தவர் மஹதிவுல்வெவ-சுவர்ன ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த டீ.எம்.சோமசிறி (57வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சேனை பயிர்ச்செய்கை- மற்றும் விவசாய நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டு வருவதினால் காட்டு மிருகங்களின் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹக்கபடஸ் ,கட்டுத்துவக்கு போன்ற வெடி பொருற்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும் மக்கள் தேவையற்ற விதத்தில் இதனைப் பயன்படுத்தி மக்களுக்கே பாதிப்புகளை ஏற்படும் விதத்தில் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் காட்டு மிருகங்களின் தொல்லை காரணமாக தேவையற்ற விதத்தில் வெடிப்பொருட்களை தயாரித்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் செயல்பட வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவருடத்தில் திருமலையில் வெடிப்பு சம்பவம். வயோதிபர் படுகாயம்.samugammedia திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுவர்ன ஜெயந்திபுர பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் வயோதிபரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் இன்று (01) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சேனைக்கு காவலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த கட்டு துவக்கு வெடித்ததாகவும் காலில் பலதத காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவ்வாறு படுகாயமடைந்தவர் மஹதிவுல்வெவ-சுவர்ன ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த டீ.எம்.சோமசிறி (57வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.தற்போது சேனை பயிர்ச்செய்கை- மற்றும் விவசாய நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டு வருவதினால் காட்டு மிருகங்களின் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹக்கபடஸ் ,கட்டுத்துவக்கு போன்ற வெடி பொருற்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும் மக்கள் தேவையற்ற விதத்தில் இதனைப் பயன்படுத்தி மக்களுக்கே பாதிப்புகளை ஏற்படும் விதத்தில் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் காட்டு மிருகங்களின் தொல்லை காரணமாக தேவையற்ற விதத்தில் வெடிப்பொருட்களை தயாரித்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் செயல்பட வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.