தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக 462 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த வருமானம் 9 முதல் 19 ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் மட்டுமே பதிவானதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் துணை பணிப்பாளர் ஜெனரல் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய கூறியுள்ளார்.
குறித்த காலகட்டத்தில் 1.3 மில்லியன் வாகனங்கள் அதிவேக வீதிகளில் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்கள் அதிவேக வீதிகளை பயன்படுத்துவதால், இன்றும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் குறித்த வீதிகளை பயன்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.
நெடுஞ்சாலைகளுக்கு நுழைவதற்கு முன், உங்கள் வாகனத்தின் பிரேக் அமைப்பு, டயர்கள் மற்றும் சிக்னல் விளக்குகள் என்பவற்றை சரிமார்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வாகனங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 50 மீட்டர் தூரத்தை பராமரிக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சீட் பெல்ட்டை கட்டாயம் அணியுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதேநேரம், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் உடனடியாக 1969 என்ற துரித எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் கிடைத்த வருமானம் தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமாக 462 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.இந்த வருமானம் 9 முதல் 19 ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் மட்டுமே பதிவானதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் துணை பணிப்பாளர் ஜெனரல் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய கூறியுள்ளார்.குறித்த காலகட்டத்தில் 1.3 மில்லியன் வாகனங்கள் அதிவேக வீதிகளில் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்கள் அதிவேக வீதிகளை பயன்படுத்துவதால், இன்றும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் குறித்த வீதிகளை பயன்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.நெடுஞ்சாலைகளுக்கு நுழைவதற்கு முன், உங்கள் வாகனத்தின் பிரேக் அமைப்பு, டயர்கள் மற்றும் சிக்னல் விளக்குகள் என்பவற்றை சரிமார்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், வாகனங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 50 மீட்டர் தூரத்தை பராமரிக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சீட் பெல்ட்டை கட்டாயம் அணியுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.அதேநேரம், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் உடனடியாக 1969 என்ற துரித எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.