• Nov 28 2024

நீடிக்கப்பட்ட கால அவகாசம் - அஸ்வெசும திட்டம் குறித்து விசேட அறிவிப்பு

Chithra / Nov 28th 2024, 7:45 am
image


தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையையும் பொருட்படுத்தாமல், அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள பெருமளவான மக்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் குவிந்துள்ளனர்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக, புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் நேற்று முதற்தடவையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பெருமளவான மக்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வருகை தந்ததாக நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


மேலும், பெருமளவான மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க, டோக்கன் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அந்த இடத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் வாரத்தின் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


நீடிக்கப்பட்ட கால அவகாசம் - அஸ்வெசும திட்டம் குறித்து விசேட அறிவிப்பு தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையையும் பொருட்படுத்தாமல், அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள பெருமளவான மக்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் குவிந்துள்ளனர்.அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக, புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் நேற்று முதற்தடவையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பெருமளவான மக்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வருகை தந்ததாக நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.மேலும், பெருமளவான மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க, டோக்கன் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அந்த இடத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வாரத்தின் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement