• Oct 30 2024

இலங்கையை வந்தடைந்தார் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர்! கொழும்பில் முக்கிய சந்திப்புகள்

Chithra / Oct 4th 2024, 11:03 am
image

Advertisement

 


இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார் .

இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வந்துள்ளனர்.

புதிய அரசாங்கம் கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

இலங்கையை வந்தடைந்தார் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் முக்கிய சந்திப்புகள்  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார் .இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வந்துள்ளனர்.புதிய அரசாங்கம் கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

Advertisement

Advertisement

Advertisement