• Mar 26 2025

இன்ஸ்டாகிராம் மூலம் களியாட்ட விருந்து; 57 இளைஞர் யுவதிகள் கைது!

Chithra / Mar 24th 2025, 8:06 am
image

 

கம்பஹா - பமுனுகம, உஸ்வெட்டகேயாவ பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத போதைப்பொருள் விருந்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உஸ்வெட்டகேயாவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவு இன்ஸ்டாகிராம் மூலம் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விருந்து நடத்தப்படுவதாகக் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட சோதனையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

அதன்படி, இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சா போதைபொருட்களை பயன்படுத்தியுள்ளதாகவும், 

மேலும் ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த சுற்றிவளைப்பில் 7 பெண் சந்தேக நபர்களையும் 34 ஆண் சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இன்ஸ்டாகிராம் மூலம் களியாட்ட விருந்து; 57 இளைஞர் யுவதிகள் கைது  கம்பஹா - பமுனுகம, உஸ்வெட்டகேயாவ பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத போதைப்பொருள் விருந்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உஸ்வெட்டகேயாவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவு இன்ஸ்டாகிராம் மூலம் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விருந்து நடத்தப்படுவதாகக் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட சோதனையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.அதன்படி, இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சா போதைபொருட்களை பயன்படுத்தியுள்ளதாகவும், மேலும் ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், குறித்த சுற்றிவளைப்பில் 7 பெண் சந்தேக நபர்களையும் 34 ஆண் சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement