கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் வெப்பநிலை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக விமலசுரேந்திர கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ மவுசாகல மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 18 அடி குறைந்த உள்ளது அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 13 அடி குறைந்து உள்ளது.
கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது. மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது. ஏனைய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் இவ்வாறு குறைந்த நிலையில் காணப்படுகிறது.
தொடர்ந்து இவ்வாறு காலநிலை தோன்றும் பட்சத்தில் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
தற்போது பல தோட்டங்களில் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடும் வெப்பம்- நுவரெலியா நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் வெப்பநிலை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக விமலசுரேந்திர கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ மவுசாகல மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 18 அடி குறைந்த உள்ளது அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 13 அடி குறைந்து உள்ளது. கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது. மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது. ஏனைய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் இவ்வாறு குறைந்த நிலையில் காணப்படுகிறது.தொடர்ந்து இவ்வாறு காலநிலை தோன்றும் பட்சத்தில் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.தற்போது பல தோட்டங்களில் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.