• May 03 2024

கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பரிசோதனை....!

Chithra / Apr 23rd 2024, 3:05 pm
image

Advertisement


பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் இப்பகுதியில் இயங்கிவரும் ஆறு தொழிற்சாலைகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் சுகாதாரக் கண்காணிப்புப் பரிசோனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் அதிகளவான கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படு்தல் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 

இவை சரியன வகையில் உணவுப் பாதுகாப்பு முறைகள், தொழிலாளர் பாதுகாப்பு, சுற்றாடல் சுகாதாரம் என்பவற்றைக் கடைப்பிடித்து இயங்குகின்றனவா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது பயன்படுத்தப்பட்ட கழிவு நீர் உரிய வகையில் பரிசோதிக்கப்பட்டே கடலுக்குள் விட வேண்டுமெனவும்,  

உணவு பதனிடும் போது தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.


கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பரிசோதனை. பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் இப்பகுதியில் இயங்கிவரும் ஆறு தொழிற்சாலைகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் சுகாதாரக் கண்காணிப்புப் பரிசோனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் அதிகளவான கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படு்தல் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவை சரியன வகையில் உணவுப் பாதுகாப்பு முறைகள், தொழிலாளர் பாதுகாப்பு, சுற்றாடல் சுகாதாரம் என்பவற்றைக் கடைப்பிடித்து இயங்குகின்றனவா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது பயன்படுத்தப்பட்ட கழிவு நீர் உரிய வகையில் பரிசோதிக்கப்பட்டே கடலுக்குள் விட வேண்டுமெனவும்,  உணவு பதனிடும் போது தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement