• Dec 17 2025

பண்டிகைக் காலத்தில் போலி 5000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில்! பொலிஸாரின் எச்சரிக்கை

Chithra / Dec 17th 2025, 9:16 am
image

 பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர். 

 

இந்தநிலையில், பணத்தைக் கையாளும் போது போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் கோரியுள்ளார். 

 

பண்டிகைக் காலத்தின் போது, பெரும்பாலும் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களே புழக்கத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாகவும், இதுபோன்று நாணயத்தாள்கள் புழக்கத்திலிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 

இந்தநிலையில், போலி நாணயத்தாள்கள் தொடர்பான அனைத்து சம்பவங்களையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.


2025 ஆம் ஆண்டில் இதுவரை போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 535 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


போலி பணத்தாள்கள் அச்சிடுதல், அவற்றை வைத்திருத்தல் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடுவதற்கான உபகரணங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் போலி 5000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் பொலிஸாரின் எச்சரிக்கை  பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.  இந்தநிலையில், பணத்தைக் கையாளும் போது போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் கோரியுள்ளார்.  பண்டிகைக் காலத்தின் போது, பெரும்பாலும் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களே புழக்கத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாகவும், இதுபோன்று நாணயத்தாள்கள் புழக்கத்திலிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்தநிலையில், போலி நாணயத்தாள்கள் தொடர்பான அனைத்து சம்பவங்களையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.2025 ஆம் ஆண்டில் இதுவரை போலி 5000 ரூபாய் பணத் தாள்கள் 535 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.போலி பணத்தாள்கள் அச்சிடுதல், அவற்றை வைத்திருத்தல் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடுவதற்கான உபகரணங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement