• Nov 26 2024

பிரித்தானிய விசா தொடர்பில் போலி முகவர்களால் மேற்கொள்ளப்படும் மோசடி...! பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை...!

Sharmi / May 10th 2024, 11:53 am
image

ஐக்கிய இராச்சியத்திற்கு விசா சேவைகளை வழங்குவதாக கூறி  போலி முகவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர்  இலங்கையர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது  தொடர்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரிட்டிஷ் உயர் ஆணையம்,

போலி முகவர்கள் இங்கிலாந்து விசா செயல்முறையை விரைவுபடுத்த முடியும் என்று கூறலாம் அல்லது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து  மூன்றாம் தரப்பு மூலம்  தங்கள் விசா விண்ணப்பங்களை  மேற்கொள்பவர்கள் குறித்த தரப்பினர் நம்பத்தகுந்தவர்களாக  என்பதை உறுதிப்படுத்துமாறு உயர் ஆணையம் கோரியுள்ளது. 

மேலும்,  விசா விண்ணப்ப செயல்முறைகளை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேலும் கேட்டுக்கொண்டார்.


பிரித்தானிய விசா தொடர்பில் போலி முகவர்களால் மேற்கொள்ளப்படும் மோசடி. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை. ஐக்கிய இராச்சியத்திற்கு விசா சேவைகளை வழங்குவதாக கூறி  போலி முகவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர்  இலங்கையர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது  தொடர்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரிட்டிஷ் உயர் ஆணையம், போலி முகவர்கள் இங்கிலாந்து விசா செயல்முறையை விரைவுபடுத்த முடியும் என்று கூறலாம் அல்லது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து  மூன்றாம் தரப்பு மூலம்  தங்கள் விசா விண்ணப்பங்களை  மேற்கொள்பவர்கள் குறித்த தரப்பினர் நம்பத்தகுந்தவர்களாக  என்பதை உறுதிப்படுத்துமாறு உயர் ஆணையம் கோரியுள்ளது. மேலும்,  விசா விண்ணப்ப செயல்முறைகளை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement