• May 19 2026

சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி!

shanu / May 18th 2026, 11:24 am
image

2026 ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது 38.8% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 876,277 ஆக பதிவாகியுள்ளது.


அத்துடன், இக்காலப்பகுதியில் ஈட்டப்பட்ட மொத்த சுற்றுலா வருவாய் 1,111 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 


சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 135,643 ஆகும்.


இது, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 896,884 சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.3% உம், சுற்றுலா வருவாய் 19.4% உம் வீழ்ச்சியடைந்துள்ளமையை காட்டுகின்றது.

சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி 2026 ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது 38.8% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 876,277 ஆக பதிவாகியுள்ளது.அத்துடன், இக்காலப்பகுதியில் ஈட்டப்பட்ட மொத்த சுற்றுலா வருவாய் 1,111 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 135,643 ஆகும்.இது, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 896,884 சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.3% உம், சுற்றுலா வருவாய் 19.4% உம் வீழ்ச்சியடைந்துள்ளமையை காட்டுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement