கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் ஊத்துச்சேனை கிராமத்தில் 2 பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு(12) இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இறந்தவரது மனைவியின் சகோதரர் இவரை தாக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை. கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் ஊத்துச்சேனை கிராமத்தில் 2 பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் நேற்றிரவு(12) இடம்பெற்றுள்ளது.குடும்பத் தகராறு காரணமாக இறந்தவரது மனைவியின் சகோதரர் இவரை தாக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.