• Nov 25 2024

குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது! - பிரதமரின் அதிரடி அறிவிப்பு

Chithra / Nov 4th 2024, 11:15 am
image


 

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் தேசிய மக்கள் சக்தி மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமரசூரிய, 

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பிற வசதிகள் போன்ற வசதிகள் குறைவாகவே இருக்கும்.

எம்.பி.க்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தமது தனிப்பட்ட ஊழியர்களாக இனிவரும் காலங்களில் நியமிக்க முடியாது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் நல்வாழ்வை விட நாட்டின் எதிர்காலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது - பிரதமரின் அதிரடி அறிவிப்பு  புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் தேசிய மக்கள் சக்தி மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமரசூரிய, புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பிற வசதிகள் போன்ற வசதிகள் குறைவாகவே இருக்கும்.எம்.பி.க்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தமது தனிப்பட்ட ஊழியர்களாக இனிவரும் காலங்களில் நியமிக்க முடியாது.மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் நல்வாழ்வை விட நாட்டின் எதிர்காலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement