• Dec 04 2024

வவுனியாவில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு..!

Sharmi / Nov 4th 2024, 11:20 am
image

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தேர்தல் அலுவலகம் இன்று(04) காலை திறந்து வைக்கப்பட்டது.

தொழிலதிபர் நெல்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ப.உதயராசா நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஜனநாயக தேசியக் கூட்டணி ப.உதயராசா தலைமையில் தபால் பெட்டி சின்னத்தில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றது.  

குறித்த கட்சியில் தேர்தல் பரப்புரைகளை முன்னெடுக்கும் பொருட்டு குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 



வவுனியாவில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு. வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தேர்தல் அலுவலகம் இன்று(04) காலை திறந்து வைக்கப்பட்டது.தொழிலதிபர் நெல்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ப.உதயராசா நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.ஜனநாயக தேசியக் கூட்டணி ப.உதயராசா தலைமையில் தபால் பெட்டி சின்னத்தில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றது.  குறித்த கட்சியில் தேர்தல் பரப்புரைகளை முன்னெடுக்கும் பொருட்டு குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.இதன்போது குறித்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement