• May 20 2024

மூதூரில் குடும்பநல உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு...!samugammedia

Sharmi / May 9th 2023, 2:07 pm
image

Advertisement

சர்வதேச குடும்பநல உத்தியோகத்தர் தினத்தை முன்னிட்டு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையுணர்வோடு  செயற்படும் 22 குடும்பநல உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் - கட்டைபறிச்சான் கிராமிய சுகாதார நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.

இவ் கௌரவிப்பு நிகழ்வை கட்டைபறிச்சான் பொதுமக்கள், அன்னையர் ஆதரவுக்குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது அதிதிகள் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் அழைத்துவரப்பட்டனர்.

இந்நிகழ்வில் குடும்பநல உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்தோடு மூதூர் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, உதவி சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்டோரின் சேவையை பாராட்டி அவர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவிப்பு நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.பீ.எம்.ஹில்மி அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக மூதூர் உதவி சுகாதார வைத்திய அதிகாரி அஞ்சலி, மூதூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எம்.அரூஸ், கட்டைபறிச்சான் கிராம உத்தியோகத்தர், கட்டைபறிச்சான் கிராம சமுக அமைப்புக்களின் முக்கியஷ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூதூரில் குடும்பநல உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு.samugammedia சர்வதேச குடும்பநல உத்தியோகத்தர் தினத்தை முன்னிட்டு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையுணர்வோடு  செயற்படும் 22 குடும்பநல உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் - கட்டைபறிச்சான் கிராமிய சுகாதார நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.இவ் கௌரவிப்பு நிகழ்வை கட்டைபறிச்சான் பொதுமக்கள், அன்னையர் ஆதரவுக்குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.இதன்போது அதிதிகள் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் அழைத்துவரப்பட்டனர்.இந்நிகழ்வில் குடும்பநல உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்தோடு மூதூர் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, உதவி சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்டோரின் சேவையை பாராட்டி அவர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.கௌரவிப்பு நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.பீ.எம்.ஹில்மி அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.ஏனைய அதிதிகளாக மூதூர் உதவி சுகாதார வைத்திய அதிகாரி அஞ்சலி, மூதூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எம்.அரூஸ், கட்டைபறிச்சான் கிராம உத்தியோகத்தர், கட்டைபறிச்சான் கிராம சமுக அமைப்புக்களின் முக்கியஷ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement