• May 20 2024

பிரபல நடிகர் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் கவலைக்கிடம் - சோகத்தில் திரையுலகம்! samugammedia

Chithra / Apr 26th 2023, 8:33 am
image

Advertisement

மின்னல் முரளி, மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிங்கம், குருதி உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் மலையாள நடிகர்  மம்மூக்கோயா.

கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த பிரபல மலையாள நடிகர் மம்மூக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இவர் முன்னதாக கேரள மாநிலம், களிகவு மாவட்டத்தின் நடைபெற்ற கால்பந்து போட்டியின் விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையில், திடீரென அவர் பேச்சு மூச்சற்று மயங்கி விழுந்துள்ளார். 

தொடர்ந்து மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, விரைந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. தற்போது மம்மூக்கோயா கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான மம்மூக்கோயா. 1979ஆம் ஆண்டு மேடைக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கிய இவர், மலபார் பகுதி வட்டார வழக்கில் பேசி நடிப்பில் பிரசித்திபெற்றார். மேலும் தன் உடல்பாணியாலும் நகைச்சுவை செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்துள்ளார். 

இந்நிலையில், மம்மூக்கோயாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், எனினும் 72 மணி நேரத்துக்கு அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முன்னதாக பிரபல நடிகர் சரத்பாபு உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த  சரத்பாபுவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழி திரைப்படங்களில் வில்லன், ஹீரோ நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் சரத்பாபு.

1977ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு, ஒரு புறம் தேர்ந்தெடுத்த படங்களிலும் மற்றொருபுறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார். 


குறிப்பாக, தமிழில் 1992ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்திலும் 1995ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்திலும் நடித்து பிரபலமானவர்.  இவருக்கு தற்போது 71 வயதாகிறது. இறுதியாக சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படத்தில் சமந்தா நடித்திருந்தார்.

கடந்த 20ஆம் தேதி ஹைதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சரத் பாபுவின் உடல் உறுப்புகள் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் கவலைக்கிடம் - சோகத்தில் திரையுலகம் samugammedia மின்னல் முரளி, மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிங்கம், குருதி உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் மலையாள நடிகர்  மம்மூக்கோயா.கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த பிரபல மலையாள நடிகர் மம்மூக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவர் முன்னதாக கேரள மாநிலம், களிகவு மாவட்டத்தின் நடைபெற்ற கால்பந்து போட்டியின் விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையில், திடீரென அவர் பேச்சு மூச்சற்று மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, விரைந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. தற்போது மம்மூக்கோயா கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான மம்மூக்கோயா. 1979ஆம் ஆண்டு மேடைக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கிய இவர், மலபார் பகுதி வட்டார வழக்கில் பேசி நடிப்பில் பிரசித்திபெற்றார். மேலும் தன் உடல்பாணியாலும் நகைச்சுவை செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், மம்மூக்கோயாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், எனினும் 72 மணி நேரத்துக்கு அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் முன்னதாக பிரபல நடிகர் சரத்பாபு உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த  சரத்பாபுவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழி திரைப்படங்களில் வில்லன், ஹீரோ நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் சரத்பாபு.1977ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு, ஒரு புறம் தேர்ந்தெடுத்த படங்களிலும் மற்றொருபுறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார். குறிப்பாக, தமிழில் 1992ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்திலும் 1995ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்திலும் நடித்து பிரபலமானவர்.  இவருக்கு தற்போது 71 வயதாகிறது. இறுதியாக சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படத்தில் சமந்தா நடித்திருந்தார்.கடந்த 20ஆம் தேதி ஹைதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சரத் பாபுவின் உடல் உறுப்புகள் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement