• Dec 21 2024

பயிர்கள் அழியும் அபாயம் - உர மானியம் வழங்குமாறு விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Chithra / Dec 20th 2024, 3:24 pm
image

 

வெலிமடை மற்றும் ஊவா பரணகம பிரதேச விவசாயிகள் தமக்கு உர மானியம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உருளைக்கிழங்கு செய்கையில் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதாகவும் வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் தமது நிலையைக் கருத்தில் கொண்டு தமக்கு உர மானியம் வழங்குமாறும்  விவசாயிகள்  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை செய்கையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயிர்கள் அழியும் அபாயம் - உர மானியம் வழங்குமாறு விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை  வெலிமடை மற்றும் ஊவா பரணகம பிரதேச விவசாயிகள் தமக்கு உர மானியம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், உருளைக்கிழங்கு செய்கையில் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதாகவும் வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலையில் தமது நிலையைக் கருத்தில் கொண்டு தமக்கு உர மானியம் வழங்குமாறும்  விவசாயிகள்  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை செய்கையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.அதன்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement