பொரளை மயான சந்தியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சிசிடிவி காட்சிகளில், மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட கிரேன் பொரளை மயானத்திற்கு அருகில் பல வாகனங்கள் மீது மோதி மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி செல்கின்றதைக் காண முடிகிறது.
குறிப்பாக, 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் இந்த விபத்தில் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.
விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது.
கிரேன் ராஜகிரிய நோக்கிலிருந்து பொரளை நோக்கிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொரளையில் கோர விபத்து: ஒருவர் பலி- விசாரணையில் அதிர்ச்சி பொரளை மயான சந்தியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளில், மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட கிரேன் பொரளை மயானத்திற்கு அருகில் பல வாகனங்கள் மீது மோதி மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி செல்கின்றதைக் காண முடிகிறது. குறிப்பாக, 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் இந்த விபத்தில் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது. கிரேன் ராஜகிரிய நோக்கிலிருந்து பொரளை நோக்கிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.