• Nov 23 2024

தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கி மகளின் உயிரை காப்பாற்றிய தந்தை!

Tamil nila / Jul 12th 2024, 7:33 pm
image

சிறுமியொருவர் அரியவகை கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதையடுத்து இம்ரான்கான் என்ற சிறுமியின் தந்தை தனது கல்லீரலில் ஒரு பகுதியை கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த 4 வயது சிறுமி ' Progressive Familial inrrahepatic cholestasis type3' என்ற கல்லீரலை தாக்கும் ஒரு அரிய வகை நோயால் நீண்டகாலமாக பாதிப்படைந்து காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் சகோதரியும் இதேபோன்று கல்லீரல் பிரச்சினைக்கு அவதியுற்று உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியும் அதேபோன்ற தொரு பாதிப்புக்குள்ளானதால் இவரை இழந்துவிடக்கூடாது என பெற்றோர் உறுதியாக இருந்துள்ளனர்.

சிறுமியின் தந்தை இம்ரான்கான் (40 வயது) விவசாய நிறுவனம் ஒன்றில் வர்த்தக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

கல்லீரல் நோயால் அவதியுற்ற குறித்த சிறுமி கல்வி ரீதியாகவோ விளையாடவோ செயற்பட முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் முன்பள்ளிக்கு கூட அவரால் செல்ல முடியவில்லை. பல பரிசோதனைகள் பல சிகிச்சைகள் என அந்த சிறுமியின் வாழ்க்கை வைத்தியசாலையை மையப்படுத்தியே இருந்துள்ளது.

இதனால் வேதனையடைந்த சிறுமியின் தந்தை, தன்னுடைய கல்லீரலை சிறுமிக்கு பொருத்தமுடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்திய வைத்தியர்கள் அதற்காக பரிசோதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு போதுமான வயது வரும் வரை வழக்கமான பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்தினர்.

வெளியிலிருந்து உடல் பாகங்களை தானம் செய்வோர் எவரும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் சிறுமியின் தந்தையின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அது மிகவும் பொருத்தமாக காணப்பட்டது. அதையே இம்ரான்கானும் எதிர்பார்த்தார் என அபுதாபி வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் தெரிவித்தார்.

சிறுமிக்கு இந்த சத்திரகிசிச்சை மேற்கொண்டமையானது அவர்களுக்கு மிகவும் சவால் மிக்கதாக இருந்ததாகவும், இறுக்கமான சூழ்நிலையில் அவர்கள் சரியான தீர்மானத்தை மேற்கொண்டதால் சிறுமி ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர் குறிப்பிட்டார்.

சிகிச்சைக்கு பின் சிறுமி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தனது முன்பள்ளிக்கு செல்ல ஆயத்தமாக இருப்பதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.


தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கி மகளின் உயிரை காப்பாற்றிய தந்தை சிறுமியொருவர் அரியவகை கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதையடுத்து இம்ரான்கான் என்ற சிறுமியின் தந்தை தனது கல்லீரலில் ஒரு பகுதியை கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த 4 வயது சிறுமி ' Progressive Familial inrrahepatic cholestasis type3' என்ற கல்லீரலை தாக்கும் ஒரு அரிய வகை நோயால் நீண்டகாலமாக பாதிப்படைந்து காணப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியின் சகோதரியும் இதேபோன்று கல்லீரல் பிரச்சினைக்கு அவதியுற்று உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சிறுமியும் அதேபோன்ற தொரு பாதிப்புக்குள்ளானதால் இவரை இழந்துவிடக்கூடாது என பெற்றோர் உறுதியாக இருந்துள்ளனர்.சிறுமியின் தந்தை இம்ரான்கான் (40 வயது) விவசாய நிறுவனம் ஒன்றில் வர்த்தக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.கல்லீரல் நோயால் அவதியுற்ற குறித்த சிறுமி கல்வி ரீதியாகவோ விளையாடவோ செயற்பட முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் முன்பள்ளிக்கு கூட அவரால் செல்ல முடியவில்லை. பல பரிசோதனைகள் பல சிகிச்சைகள் என அந்த சிறுமியின் வாழ்க்கை வைத்தியசாலையை மையப்படுத்தியே இருந்துள்ளது.இதனால் வேதனையடைந்த சிறுமியின் தந்தை, தன்னுடைய கல்லீரலை சிறுமிக்கு பொருத்தமுடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்திய வைத்தியர்கள் அதற்காக பரிசோதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு போதுமான வயது வரும் வரை வழக்கமான பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்தினர்.வெளியிலிருந்து உடல் பாகங்களை தானம் செய்வோர் எவரும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் சிறுமியின் தந்தையின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அது மிகவும் பொருத்தமாக காணப்பட்டது. அதையே இம்ரான்கானும் எதிர்பார்த்தார் என அபுதாபி வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் தெரிவித்தார்.சிறுமிக்கு இந்த சத்திரகிசிச்சை மேற்கொண்டமையானது அவர்களுக்கு மிகவும் சவால் மிக்கதாக இருந்ததாகவும், இறுக்கமான சூழ்நிலையில் அவர்கள் சரியான தீர்மானத்தை மேற்கொண்டதால் சிறுமி ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர் குறிப்பிட்டார்.சிகிச்சைக்கு பின் சிறுமி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தனது முன்பள்ளிக்கு செல்ல ஆயத்தமாக இருப்பதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement