• Jan 19 2025

கைதாகலாம் என்ற அச்சம் - முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ மனுத்தாக்கல்

Chithra / Jan 17th 2025, 12:06 pm
image

 

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதல் கட்டமாக வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்கச் செல்லும் ​போது தான் கைது செய்யப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் முன்பிணை கோரும் மனுவொன்றை மனுஷ நாணயக்கார நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்கு அண்மையில் கருத்து தெரிவித்த மனுஷ நாணயக்கார, தனது சகோதரர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தனது பெயரை விற்று மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோன்று, தனக்கு ஆபத்து என்று தெரிந்த நிலையிலும் நாட்டின் நலன் கருதி, தெரிந்தே பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக தனது அமைச்சு அதிகாரங்களைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்ட மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவது குறித்து எதுவித அச்சமும் இல்லை என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கைதாகலாம் என்ற அச்சம் - முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ மனுத்தாக்கல்  முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதல் கட்டமாக வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்கச் செல்லும் ​போது தான் கைது செய்யப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் முன்பிணை கோரும் மனுவொன்றை மனுஷ நாணயக்கார நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்கு அண்மையில் கருத்து தெரிவித்த மனுஷ நாணயக்கார, தனது சகோதரர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தனது பெயரை விற்று மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.அதேபோன்று, தனக்கு ஆபத்து என்று தெரிந்த நிலையிலும் நாட்டின் நலன் கருதி, தெரிந்தே பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.அதற்காக தனது அமைச்சு அதிகாரங்களைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்ட மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவது குறித்து எதுவித அச்சமும் இல்லை என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement