• Nov 15 2024

நிறுத்தப்பட்டது நாகை - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை! முன்பதிவு செய்தோருக்கான அறிவிப்பு

Chithra / Nov 11th 2024, 10:56 am
image

  

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது.

இலங்கை - இந்திய கப்பல் சேவை  தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்  எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது,

மழையுடனான வானிலையினால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (8), சனிக்கிழமை (9) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆகிய நாட்களில் மழையுடனான வானிலையினால் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை.

நாளையதினமும் (12) கப்பல் சேவை வானிலை சார்ந்து தீர்மானிக்கபடும். எனவே நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு மேல் நாங்கள் முன்பதிவு செய்யவில்லை.

சீரற்ற வானிலையினால் தற்காலிகமாக கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், கிட்டத்தட்ட 150 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசை முன்னறிவிப்புகள் கப்பல் பயணங்களைத் திட்டமிட உதவுகின்றன. 

பயணிகளை ஏற்றிச் செல்வது பாதுகாப்பானதா என்பதைத் தீர்மானிக்க, இலங்கை மற்றும் இந்திய வானிலை முன்னறிவிப்புகளையும், Windy app போன்ற செயலிகளையும் நாங்கள் நம்பியுள்ளோம். என தெரிவித்தார்.


நிறுத்தப்பட்டது நாகை - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை முன்பதிவு செய்தோருக்கான அறிவிப்பு   சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது.இலங்கை - இந்திய கப்பல் சேவை  தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்  எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது,மழையுடனான வானிலையினால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை (8), சனிக்கிழமை (9) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆகிய நாட்களில் மழையுடனான வானிலையினால் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை.நாளையதினமும் (12) கப்பல் சேவை வானிலை சார்ந்து தீர்மானிக்கபடும். எனவே நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு மேல் நாங்கள் முன்பதிவு செய்யவில்லை.சீரற்ற வானிலையினால் தற்காலிகமாக கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், கிட்டத்தட்ட 150 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசை முன்னறிவிப்புகள் கப்பல் பயணங்களைத் திட்டமிட உதவுகின்றன. பயணிகளை ஏற்றிச் செல்வது பாதுகாப்பானதா என்பதைத் தீர்மானிக்க, இலங்கை மற்றும் இந்திய வானிலை முன்னறிவிப்புகளையும், Windy app போன்ற செயலிகளையும் நாங்கள் நம்பியுள்ளோம். என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement