பூநகரி பிரதேச செயலர் பிரிவின் சில பகுதிகளில் 2009 காலப்பகுதியின் பின்னர் மீள்குடியமர்ந்த மக்கள் வன ஒதுக்குப் பிரதேசத்தினுள் அத்துமீறி குடியமர்ந்ததாக வனவளத் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்கள் இவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 20.08.2025ம் திகதி பூநகரி பிரதேச பண்பாட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெயபுரம் பகுதிக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன், அங்கு வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடியிருந்ததுடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டில் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது மற்றும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்றைய தினம்(28.08.2025) குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த களவிஜயம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் பூநகரி பிரதேச செயலாளர், வனவள திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி, மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரின் இணைப்பாளர், நிர்வாக கிராம அலுவலர், கிராம சேவகர் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பொதுமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டன. இதனடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகளை முடிவுறுத்தி குறித்த காணியை அதில் வசிப்போருக்கு வழங்குவதற்கான காத்திரமான நடவடிக்கையினை முன்னெடுக்கப்பதாக
மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
மேலும் வனப் பகுதிகளில் மேலதிக அத்துமீறல்களை இத்துடன் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார். இந்நிலை மீறப்பட்டால் வழக்கு தொடரப்பட்டுள்ள பொதுமக்களுக்கே இவை பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்
பூநகரியில் வனவளத் திணைக்களத்தின் காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் களவிஜயம் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் சில பகுதிகளில் 2009 காலப்பகுதியின் பின்னர் மீள்குடியமர்ந்த மக்கள் வன ஒதுக்குப் பிரதேசத்தினுள் அத்துமீறி குடியமர்ந்ததாக வனவளத் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.குறித்த பகுதி மக்கள் இவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இந்நிலையில் கடந்த 20.08.2025ம் திகதி பூநகரி பிரதேச பண்பாட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெயபுரம் பகுதிக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன், அங்கு வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடியிருந்ததுடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டில் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது மற்றும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்றைய தினம்(28.08.2025) குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.குறித்த களவிஜயம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் பூநகரி பிரதேச செயலாளர், வனவள திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி, மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரின் இணைப்பாளர், நிர்வாக கிராம அலுவலர், கிராம சேவகர் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது பொதுமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டன. இதனடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகளை முடிவுறுத்தி குறித்த காணியை அதில் வசிப்போருக்கு வழங்குவதற்கான காத்திரமான நடவடிக்கையினை முன்னெடுக்கப்பதாக மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.மேலும் வனப் பகுதிகளில் மேலதிக அத்துமீறல்களை இத்துடன் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார். இந்நிலை மீறப்பட்டால் வழக்கு தொடரப்பட்டுள்ள பொதுமக்களுக்கே இவை பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்