வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இரு முனையில் கடும் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.
18 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி - 2,838 வாக்குகள் - 4 உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி - 2,085 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (போனஸ்-1), இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,957 வாக்குகள் - 3 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-1), சிறிலங்கா தொழிலாளர் கட்சி - 1,573 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-2), ஜனநாயக தேசிய கூட்டணி - 1,225 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-1), சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 626 வாக்குகள் - 1 உறுப்பினர் (போனஸ்-1), சுயாதீன குழு 2 - 340 வாக்குகள் 1 உறுப்பினர் (போனஸ்-1) என பகிரப்பட்டுள்ளன.
தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்பவற்றுக்கு வவுனியாவின் ஏனைய சபைகளில் ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அங்கு தான் ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்பவற்றின் ஆதரவைப் பெற முயல்கிறது.
மறுபுறம், தேசிய மக்கள் சக்தியும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பும் 18 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் கொண்டுள்ளதாக தற்போதைய நிலையில் தெரியவருகிறது.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஒரு கூட்டாக 9 ஆசனங்களைக் கொண்டுள்ளன.
மறுபுறம் தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா தொழிலாளர் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, சிறிங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுயாதீன குழு-02 என்பன இணைந்து ஒரு அணியாக 9 ஆசனங்களை கொண்டுள்ளன.
இந்நிலையில், வவுனியா மாநகரசபையில் சிறிலங்கா தொழிலாளர் கட்சியுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரே சின்னத்தில் இணைந்து போட்டியிட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளமையால் வெண்கல செட்டிகுளத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க செய்படுவார்களா என்ற கேள்வியும் உள்ளது.
ஆதரவு வழங்கினால் சபை தவிசாளர், உப தவிசாளர் தெரிவின் போது சமனிலை ஏற்படும் இடத்தில் திருவுச் சீட்டின் மூலமே தவிசாளர், உப தவிசாளர் தெரிவு செய்யப்படுவர். பேரம் பேசல்கள் தொடரும் நிலையில் யாராவது மாறுவார்களா அல்லது திருவுலச் சீட்டா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
வெங்கலச்செட்டிகுளத்தில் ஆட்சி அமைப்பதில் இரு முனைகளில் கடும் போட்டி. வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இரு முனையில் கடும் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.18 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி - 2,838 வாக்குகள் - 4 உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி - 2,085 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (போனஸ்-1), இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,957 வாக்குகள் - 3 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-1), சிறிலங்கா தொழிலாளர் கட்சி - 1,573 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-2), ஜனநாயக தேசிய கூட்டணி - 1,225 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-1), சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 626 வாக்குகள் - 1 உறுப்பினர் (போனஸ்-1), சுயாதீன குழு 2 - 340 வாக்குகள் 1 உறுப்பினர் (போனஸ்-1) என பகிரப்பட்டுள்ளன.தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்பவற்றுக்கு வவுனியாவின் ஏனைய சபைகளில் ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அங்கு தான் ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்பவற்றின் ஆதரவைப் பெற முயல்கிறது.மறுபுறம், தேசிய மக்கள் சக்தியும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் 18 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் கொண்டுள்ளதாக தற்போதைய நிலையில் தெரியவருகிறது.குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஒரு கூட்டாக 9 ஆசனங்களைக் கொண்டுள்ளன. மறுபுறம் தேசிய மக்கள் சக்தி, சிறிலங்கா தொழிலாளர் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, சிறிங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுயாதீன குழு-02 என்பன இணைந்து ஒரு அணியாக 9 ஆசனங்களை கொண்டுள்ளன.இந்நிலையில், வவுனியா மாநகரசபையில் சிறிலங்கா தொழிலாளர் கட்சியுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரே சின்னத்தில் இணைந்து போட்டியிட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளமையால் வெண்கல செட்டிகுளத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க செய்படுவார்களா என்ற கேள்வியும் உள்ளது. ஆதரவு வழங்கினால் சபை தவிசாளர், உப தவிசாளர் தெரிவின் போது சமனிலை ஏற்படும் இடத்தில் திருவுச் சீட்டின் மூலமே தவிசாளர், உப தவிசாளர் தெரிவு செய்யப்படுவர். பேரம் பேசல்கள் தொடரும் நிலையில் யாராவது மாறுவார்களா அல்லது திருவுலச் சீட்டா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.