• May 09 2024

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம் - கேக் வெட்டி தடல்புடல் கொண்டாட்டம்..!

Chithra / Dec 12th 2022, 1:34 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைகள் திங்கட்கிழமை (12) முதல் ஆரம்பமாகியது.

இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.


வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு தினங்களுக்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.


இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் திங்கட்கிழமை(12) முற்பகல் 11.30 மணிக்கு தரையிறங்கியது.

இந்த விமானத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கான இந்திய பயணிகள் 28 பேர் வருகை தந்தனர்.


இந்தியா பிரதிநிதிகளை இலங்கை அமைச்சர் மற்றும் இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.

இதையடுத்து  யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அலையன்ஸ் எயார்லைன்ஸ் (Alliance Air) விமானிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்வில் இலங்கை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் சுற்றுலா துறை பிரதிநிதிகள், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம் - கேக் வெட்டி தடல்புடல் கொண்டாட்டம். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைகள் திங்கட்கிழமை (12) முதல் ஆரம்பமாகியது.இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு தினங்களுக்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் திங்கட்கிழமை(12) முற்பகல் 11.30 மணிக்கு தரையிறங்கியது.இந்த விமானத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கான இந்திய பயணிகள் 28 பேர் வருகை தந்தனர்.இந்தியா பிரதிநிதிகளை இலங்கை அமைச்சர் மற்றும் இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.இதையடுத்து  யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அலையன்ஸ் எயார்லைன்ஸ் (Alliance Air) விமானிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் இலங்கை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் சுற்றுலா துறை பிரதிநிதிகள், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement